திருவாரூர் மாவட்டத்தில் 91 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 ஆயிரத்து 551 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதையடுத்து, அமைச்சர் காமராஜர் முன்னிலையில் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
அப்போது மாணவர்களிடையே பேசிய அமைச்சர் காமராஜ், மாணவர்கள் படித்தால் மட்டுமே எதிர்காலத்தில் தங்களது லட்சியத்தை அடைய முடியும் என்றார். மறைந்த குடியரசு முன்னாள்தலைவர் அப்துல்கலாம் கூறியதுபோல மாணவர்கள் கனவு காண வேண்டும். அந்தக் கனவு இந்தியாவிற்குப் பெருமைசேர்ப்பதற்கானதாக அமைய வேண்டும் என்றார்.