தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் பாடத் திட்டம்

திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2020 -21ஆம் ஆண்டிலிருந்து பி.டெக் பாடத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

By

Published : Jun 30, 2020, 12:21 PM IST

Published : Jun 30, 2020, 12:21 PM IST

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பி.டெக் பாடத் திட்டம்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பி.டெக் பாடத் திட்டம்

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தின் மூலம் முதுகலைப் பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் புதிய பாடத் திட்டத்தை செயல்படுத்த பல்கலைக்கழக துணைவேந்தர் தாஸ் முன்னிலையில் பதிவாளர் புவனேஸ்வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் காரணமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2020-21ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக் பாடத்திட்டம் செயல்பட உள்ளதாக மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details