தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகாவுக்கு துணை போய்விடக்கூடாது - பிஆர். பாண்டியன் - புதிய குடிநீர்திட்டம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு அவமதிப்பதின் மூலம் ஆணையத்தை முடக்க நினைக்கும் கர்நாடகாவிற்கு துணை போய் விடக்கூடாது என பிஆர். பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை
காவிரி மேலாண்மை

By

Published : Jan 24, 2022, 8:13 AM IST

Updated : Jan 24, 2022, 10:10 AM IST

மன்னார்குடி : தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட முன்வந்துள்ளது. ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட்டு மாதந்தோறும் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் துவங்கி தமிழகத்தில் மேட்டூர் அணை வரையிலும் அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக அரசாங்கம் ஆணையத்தை முடக்குவதற்கான மறைமுக சதியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

புதிய குடிநீர்திட்டம்

தமிழகத்தில் மேட்டூர் அணை வரை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் புதிய குடிநீர்திட்டம் அறிவிப்பதற்கு முன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. இருந்தாலும்
அதற்கான அனுமதியை ஆணையத்தின் மூலம் தான் பெற வேண்டும். அதனை தமிழ்நாடு முன்மாதிரியாக பின்பற்றி ஆணையத்தின் அதிகார வரம்பை உறுதிப்படுத்த முன்வர வேண்டும்.

அனுமதி

ஆணையத்தின் உறுப்பினராக உள்ள தமிழக நீர்ப்பாசன துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இதனை அரசுக்கு எடுத்துக்கூறி ஆணையை அனுமதியை பெற்று செயல்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இல்லையேல் ஆணையத்தை அவமதிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசே ஈடுபடுவதாக கருத வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். சட்ட ரீதியாக செயல்பட வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவிற்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகாவுக்கு துணை போய்விடக்கூடாது - பிஆர். பாண்டியன்

எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அனுமதியையும் ஆணையத்தின் மூலம் பெற்று அதனை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையேல் கர்நாடகம் ஆணையத்தை அவமதித்து மேகதாது அணை கட்ட துடிக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு துணை போனதாக அமைந்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.
புதிய குடிநீர் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து காவிரியில் மேட்டூர் அணை வரை புதிய குடிநீர் திட்டமாக இருந்தாலும் ஆணையத்தின் அனுமதி பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

காவிரி மேலாண்மை ஆணைய கட்டுப்பாட்டிலுள்ள காவிரி நதிநீரை பயன்படுத்தி கர்நாடகம், தமிழ்நாடு அரசுகள் புதிய குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும்பட்சத்தில் நபார்டு,உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகள் ஆணையத்தின் அனுமதி பெற்றால் தான் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதியோடு பின்பற்ற முன்வரவேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க :GIS தொழில்நுட்ப உதவி மூலம் சட்டப்பேரவை தேர்தல் - நெல்லை ஆட்சியருக்கு விருது

Last Updated : Jan 24, 2022, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details