கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மகள் மைதிலி (19). இவர் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கி இவர் படித்துவந்த நிலையில், விடுதியில் நேற்று இரவு சக மாணவிகள் உணவு அருந்தச் சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து மைதிலி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அறைக்கு திரும்பிய சக மாணவிகள் மைதிலியைக் கண்டு அலறல் சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு வார்டன் ஓடி வந்து பார்த்தபோது மைதிலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.