திருவாரூர் : திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் ’திருவிக’ என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். சமூகம், அரசியல், கல்வி எனப் பலதுறைகளில் ஈடுபாடு கொண்டு பல நூல்களை திருவிக எழுதியுள்ளார். சிறந்த மேடைப்பேச்சாளரான இவருக்கு ’தமிழ்த் தென்றல்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
முன்னதாக, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் இவருக்கு சிலை திறக்கப்பட்டது. இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ள கட்டடம் சாலையோரத்தில் இருப்பதால், தற்போது மதுப்பிரியர்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் சிலை இருக்கும் கட்டடத்தில் அருகிலுள்ள கடைக்காரர்கள் தங்களுடைய பழுதடைந்த பொருள்களை வைத்துள்ளனர்.