திருவாரூர் நகராட்சி குடியிருப்பில் மகேஸ்வரன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபா(27) என்ற மனைவியும் தமிழரசன்(7), கலைதமிழ்(5) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். மகேஸ்வரன் துப்புரவு தொழிலாளியாக திருவாரூர் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
மகேஸ்வரன் இதுவரை விடுமுறையே எடுக்காமல் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், விடுமுறை எடுத்ததாக
வருகை பதிவில் எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரன் இது குறித்து நகராட்சி ஆய்வாளர் ராமசந்திரனிடம் கேட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துப்புரவு தொழிலாளி அதற்கு அவர், விடுமுறை எடுத்ததாக வருகை பதிவில் எழுதப்பட்டிருந்ததை நீக்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இந்நிலையில் இன்று காலை பணிக்குச் சென்ற மகேஸ்வரன் வீடு திரும்பியுள்ளார். பணிக்கு செல்லாமல் ஏன் வீடு திரும்பினீர்கள் என அவரது மனைவி சுபா கேட்டதற்கு, ஆய்வாளர் ராமசந்திரன் தன்னை தொடர்ந்து இழிவாக பேசி வருவதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி விஷமருந்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுபா, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!