திருவாரூரில் உலகப்பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோயிலில் பூஜை நடைபெறும் போது சிவனடியார்கள் சார்பில் தேவாரம் ஓதப்பட்டு வருகிறது. இந்நிலையில் புற்றீடங்கொன்டார் சந்நிதியில் அமர்ந்து தேவாரம் பாடிய முத்தரசன் என்ற சிவனடியாாிடம் கோயிலில் தேவாரம் பாடக்கூடாது என அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தரசன் உடன் அர்ச்சகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கோயில் ஊழியர்கள் முத்தரசன் மீது தாக்குதல் நடத்தினர்.
திருவாரூர் தியாராஜர் கோயிலில் தற்கொலைக்கு முயன்ற சிவனடியார் - thiyagarajar kovil
திருவாரூர் : தியாகராஜர் திருக்கோயில் தேவாரம் பாட அனுமதிக்காததால் மனமுடைந்த சிவனடியார் ஒருவர், கோயிலின் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.
கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி
இதனால் மனமுடைந்த முத்தரசன் திடீரென்று பெரிய கோயிலின் ராஜகோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கோயிலில் இருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் முத்தரசனை கோயில் கோபுரத்தில் இருந்து இறக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.