தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 4 நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.