தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னார்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்! - மன்னார்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர்: ஆட்டோ தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண உதவித் தொகை வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள்

By

Published : May 29, 2020, 10:06 PM IST

ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நிவாரண உதவி உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனை, தந்தை பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், ”கரோனா பேரிடர் காலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவு, முடி திருத்தும் தொழிலாளகளுக்கு வழங்குவது போல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து ஆட்டோக்களையும் விடுவிக்க வேண்டும். ஆட்டோ பர்மிட் அனுமதி உரிமம், சாலை வரி உள்ளிட்டவை செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:’3 நபர்களை ஏற்றிச் செல்ல அனுமதி வேண்டும்’ - ஆட்டோ ஓட்டுநர்கள் மனு

ABOUT THE AUTHOR

...view details