திருவாரூர் மாவட்டம் தலையாமங்களம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன்கள் கிஷோர் (8), ஜஸ்வின் (6) மற்றும் செந்தில் குமார் (5). இவர்கள் மூவரும் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில் பள்ளி செல்ல தாமதமானதால் அவர்கள் வீட்டில் அருகில் இருந்த பாசமலர் என்பவரின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவர்கள் மூவரும், அங்கிருந்த அரிசியை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பாசமலர் அரிசி சிதறி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்தார். அதில் சிறுவர்கள் மூன்று பேரும் எலிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எலி மருந்து கலந்த அரிசியை சாப்பிட்டது தெரியவந்தது.