தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்! - ​​​​​​​திருவாரூர் மாவட்டச் செய்திகள்

​​​​​​​திருவாரூர்: குடவாசல் அருகேயுள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

tiruvarur
tiruvarur

By

Published : Dec 18, 2019, 10:22 PM IST

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் இக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் சரிவர கவனிக்கப்படாததால் ஒழுகும் கட்டடம், மேஜைகள் பற்றாக்குறை, இருபாலருக்கு கழிவறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சாலை மறியல்

இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான மாணவ, மாணவிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் உடனடியாக கட்டடங்களை சீரமைத்து தரக்கோரியும், அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாதபட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details