தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வகுப்பை புறக்கணித்து மாநாட்டிற்குச் சென்ற மாணவர்கள்! - tamil news

திருவாரூர்: நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர்.

திருவாரூர்
திருவாரூர்

By

Published : Feb 14, 2020, 11:09 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியாக சென்ற மாணவர்கள்

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்கள், நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும், கல்லூரியில் சுற்றுப்புற சுவர், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைத்திட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.

இதையும் படிங்க:காதலர் தினத்தில் உதயமான காதல் - க்யூட் காணொலி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details