தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னார்குடி அருகே வெறி நாய் கடித்து 40க்கும் மேற்பட்டோர் காயம் - வெறி நாய்

திருவாரூர்: மன்னார்குடி அருகே வெறி நாய் கடித்து 40க்கும் மேற்ப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதால் அங்கு உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

stray dog

By

Published : Jun 2, 2019, 12:02 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருகவாழ்ந்தான் ஊராட்சியை சுற்றியுள்ள கோவில்சித்தமல்லி, நொட்சியூர் ஊராட்சிகளில் 1500க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வந்துள்ளன. இவற்றில் பல நாய்களுக்கு வெறிபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கிராம மக்கள் கால்நடை மற்றும் சுகாதாரத் துறைக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதில் உரிய கவனம் செலுத்தாததால் வெறி பிடித்த நாய் ஒன்று கோவில்சித்தமல்லி, நொச்சியூர், பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களின் உள்ளே புகுந்து கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கடித்து குதறியுள்ளது. இதில் சகுந்தலா (58), செல்லம்மாள் (70), சந்திரா (40) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காயம்பட்டவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

திருவாரூர்

ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறிநாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் எம்.செல்வராசு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details