தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைக்கோல் லாரி மின்கம்பிகளில் உரசி தீ விபத்து! - thiruvarur news

திரூவாரூர்: கண்ணமங்கலம் பகுதியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பிகளில் உரசியதில் தீடிரென்று தீ பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Feb 26, 2020, 8:21 AM IST

திருவாரூர் மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு விவசாயிகள் வைக்கோலை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் விற்பனை செய்த வைக்கோலை லாரியில் ஏற்றி அனுப்பியுள்ளனர். இந்த லாரியை தருமபுரியைச் சேர்ந்த சிங்காரம் ஓட்டிச் சென்றார். வைக்கோல் லாரி சாலையை கடக்கும்போது எதிர்பாராத நிலையில் மின்சார கம்பியில் வைக்கோல் உரசி தீப்பிடித்து எரிய தொடங்கியது

வைக்கோல் லாரி தீ விபத்து

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக ஊழியர்... கையும் களவுமாக கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details