தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தையை கட்டையால் தாக்கிக் கொன்ற மகன்! - தந்தையை கட்டையால் தாக்கிக் கொன்ற மகன்

திருவாரூர்: திருமணம் செய்துவைக்க மறுத்த தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

son
son

By

Published : Jan 5, 2020, 11:09 AM IST

திருவாரூர் மாவட்டம் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையன் (65), சகுந்தலா (60) தம்பதியினர். இவர்களது மகன் சேகர் (34) வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றிவருகிறார். மேலும் தனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று கேட்டு பெற்றோரை அடிக்கடி வற்புறுத்திவந்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சேகர் அருகில் கிடந்த கட்டையால் செல்லையனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். வீட்டில் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது செல்லையன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த செல்லையனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிந்து சேகரை கைதுசெய்து சிறையிலடைத்தனர். வாய்த் தகராறில் தந்தையை, மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : முகநூலில் சிறார்களின் ஆபாச படங்களைப் பகிர்ந்த அஸ்ஸாம் இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details