தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்துறைபூண்டியில் 6 வீடுகள் எரிந்து நாசம் - திருத்துறைபூண்டியில் வீடுகள் எரிந்து நாசம்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஆறு வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது.

Six houses destroyed in a firecracker accident in Thiruthuraipoondi
Six houses destroyed in a firecracker accident in Thiruthuraipoondi

By

Published : Mar 16, 2021, 12:47 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது மீனாட்சி ஆற்றங்கரைப் பகுதி. அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காதணி விழா நடைபெற்றது.

அப்போது, அங்கு வெடிக்கப்பட்ட பட்டாசு, அருகில் உள்ள குடிசைப்பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. தீ மளமளவென அடுத்தடுத்த குடிசைகளுக்கு பரவியது .

இதனையடுத்து, அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில், 6 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

ABOUT THE AUTHOR

...view details