திருவாரூர்:கிடாரன்கொண்டான் பகுதியிலுள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாணவ மாணவிகள் உயிரைக் கொல்லும் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.