புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
திருவாரூரில் கழிவுநீர் தேக்கம் இதனால் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட நந்தவன தெரு, தெற்கு வீதி, வணக்கார தெரு, நெடும்பலம் உள்ளிட்ட இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கியுள்ளது.
திருவாரூரில் கழிவுநீர் தேக்கம் இப்பகுதிகளில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவாரூரில் கழிவுநீர் தேக்கம் தொடர்ந்து இரண்டு நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிவாசிகள் கழிவுநீரை அகற்ற திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் தேங்கிய மழைநீர்!