மன்னார்குடி அருகே செருமங்கலம் என்னும் கிராமத்தில் இரண்டு வருடங்களாக முறையாகக் குடிநீர் வழங்கவில்லை எனும் புகார் பொதுமக்களிடையே உள்ளது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்து வீட்டில் கருப்பு கொடிகட்டி இப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அப்பகுதிக்கு உடனடியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த பிறகு தண்ணீர் நிறுத்தம்; கடுப்பாகி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்! - serumangalam
திருவாரூர்: தேர்தல் முடிந்த பிறகு தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியதை கண்டித்து, கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
water
தேர்தல் முடிந்தவுடன் பழையபடி தண்ணீரை திறந்து விடவில்லை. இதுவரையில் குடிதண்ணீர் விநியோகம் இல்லாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், தமிழ்நாடு அரசைக் கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தியும், காலி குடங்களுடன் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில அரசை எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.