தஞ்சாவூர் காவல் சரகத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு தொடர்பான எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஜூலை.26) முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் திறனாய்வு தேர்வுகள் நடைபெறுகிறது.
அதன்படி இன்று (ஜூலை.26) தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் தேர்வாளர்களுக்கும், ஜூலை 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் தேர்வாளர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறனாய்வு நடைபெறவுள்ளது.
இதில் நாளொன்றுக்கு 500 நபர்கள் வீதம் 3 ஆயிரத்து 900 பேர் பங்கேற்கின்றனர். மைதானத்துக்கு வரும் தேர்வாளர்கள் நான்கு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.