தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நம்ப முடியல, அண்ணன் ஏன் இப்படி பேசினாரு...’ - ஆ.ராசா பேச்சு குறித்து சீமான் - நன்னிலத்தில் சீமான் பேட்டி

திருவாரூர்: முதலமைச்சரின் தாயார் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆ. ராசாவின் பேச்சுக்கு சீமான் பதிலடி
ஆ. ராசாவின் பேச்சுக்கு சீமான் பதிலடி

By

Published : Mar 28, 2021, 8:19 AM IST

Updated : Mar 28, 2021, 11:31 AM IST

திருவாரூர் மாவட்டம், சன்னா நல்லூரில் நாம் தமிழர் கட்சியின் நன்னிலம் தொகுதி வேட்பாளரான பாத்திமா பர்ஹானாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தலைவர்களில் மரியாதைக்குரியவர்களில் ஆ.ராசாவும் ஒருவர். அவர் முதலமைச்சர் பழனிசாமியை வெல்லமண்டியில் வேலை பார்த்தவர் என்று தெரிவித்தார். அங்கு வேலை பார்ப்பது தவறு இல்லை. சும்மா இருப்பதுதான் தவறு. உங்களுடைய தலைவர் அந்த வேலைகூட பார்க்கவில்லை.

நன்னிலத்தில் சீமான் பேட்டி

மேலும் கால் செருப்பு விலைக்குகூட மதிப்பில்லாதவர் என்றும் இழிவாகப் பேசி இருக்கிறார். ஆ.ராசா அப்படி என்ன விலை உயர்ந்த செருப்பு அணிந்திருக்கிறாரா... முதலமைச்சரின் பிறப்பு குறித்து அவர் இழிவாக பேசியிருக்கக் கூடாது. இறந்து போன தாயாரை இழிவுப்படுத்தும் வகையில் அவர் பேசியதை நம்ப முடியவில்லை" என்றார்.

Last Updated : Mar 28, 2021, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details