தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான் முதலமைச்சரான பிறகு அமித் ஷா இப்படி பேச முடியுமா...' - சீமான் எச்சரிக்கை - Seeman campaigns in support of Fatima Barhana

திருவாரூர்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா பர்ஹானாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

நன்னிலத்தில் சீமான் பரப்புரை
நன்னிலத்தில் சீமான் பரப்புரை

By

Published : Mar 28, 2021, 7:58 AM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான பாத்திமா பர்ஹானாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "திராவிடக் கட்சிகள் கோடிகளைக் கொட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நாங்கள் நல்ல கொள்கைகளைக் கூறி வாக்கு சேகரிக்கின்றோம். அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்து விடுகிறார்கள். உயர்ந்த கல்வியும் ,மருத்துவமும் வியாபாரமாகிவிட்டது. அரசு மருத்துவமனைகள் தரம் இல்லாமல் போய்விட்டது. திராவிடக் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் எனக் கூறுகிறார்கள். முதலில் ரேஷன் கடையில் பொருள்களை மக்களுக்கு சரியான முறையில் கொடுங்கள். பிறகு ரேஷன் பொருள்களை வீடுகளில் கொடுக்கலாம்.

நன்னிலத்தில் சீமான் பரப்புரை
”தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிப்பது பாஜகதான்” என அமித்ஷா கூறி வருகிறார். நான் முதல்வரான பிறகு அவர் இப்படி கூற முடியுமா? சொல்லுங்கள். தமிழ்நாடு வட மாநிலமாக மாறி வருகிறது. பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டு மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குகிறார்கள். ஆனால் இரண்டு நாள்களில் பழுதாகி மூலையில் தூக்கிப் போட வேண்டிய நிலையில்தான் அவை உள்ளன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details