ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
- வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.
- மின் கட்டணம், சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும்.
- தனியார் பள்ளி, கல்லூரி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.
- கரோனா பரவல் முடியும்வரை ரேஷன் பொருள்களை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் கோவை:பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம், காந்தி சிலை, தந்தி அலுவலகம், பூ மார்க்கெட், தங்கம் திரையரங்கம், ஜமீன் ஊத்துக்குளி ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் திருவாரூர்: எஸ்டிபிஐ கட்சி மன்னார்குடி கிளை சார்பில் பெரியார் சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மன்னார்குடி நகரத் தலைவர் முகம்மது உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருச்சி:எஸ்டிபிஐ கட்சி தொகுதிச் செயலாளர் தர்கா முஸ்தபா தலைமையில், மதுரை ரோடு ராஜா டாக்ஸி பஸ் ஸ்டாப் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் சேலம்: பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமைத் தபால் நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல கோட்டை மைதானம், கெங்கவல்லி உள்ளிட்ட ஐந்து இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் திருப்பூர்:திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியது மட்டுமல்லாமல், சாத்தான்குளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வணிகர்களுக்கு நீதி வேண்டியும் முழக்கங்களை எழுப்பினர்.
திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரி:எஸ்டிபிஐ கட்சி குமரி மாவட்டத் தலைவர் சுல்பிகர் அலி தலைமையில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் இதையும் படிங்க:கிருஷ்ணசாமி மனைவிக்குக் கரோனா; சொந்த மருத்துவமனைக்குச் சீல்!