மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 20 நாள்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள், பேரணி என வெவ்வேறு வடிவங்களில் வலுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் புதிய ரயில் நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி எதிர்ப்பு மாநாடு இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை புறக்கணிக்கப் போவதாக மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்