தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - Tamil Nadu Elementary School Teacher

திருவாரூர்: கல்வி அமைச்சர் பொய்கூறி பள்ளியை திறந்துள்ளார் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்

By

Published : Jun 22, 2019, 4:39 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், திருவாரூர் சட்டபேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பூண்டி கலைவாணனுக்கு பாராட்டு, பணி ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. விழா முடிந்து செய்தியளர்களை சந்தித்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர், மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், "டெல்லியில் நடைபெற உள்ள கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க ஆறு மாத கால அவகாசம் கேட்க வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு கல்வி அமைச்சர்கள் வற்புறுத்த வேண்டும்.

தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்

கல்வி அமைச்சர்கள் தண்ணீர் பிரச்னை இல்லை என பொய் கூறி பள்ளிகளை திறந்துள்ளனர்.
குடிநீர், கழிவறைகளில் தண்ணீரின்றி பள்ளிகளில் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், இதுவரை பாட புத்தகம், சீருடை, மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை ஆதலால் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details