திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரக்குடியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்ராஜ். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை வேனை சாலையின் ஓரமாக நிறுத்தி பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்டிருந்தார். அப்போது பின்பக்கமாக திருவாரூரை நோக்கி வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.
பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் காயம் - பள்ளிவேன் மீது மோதிய பேருந்து
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே நின்றிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் மூவர் காயமடைந்தனர்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வேனில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். இதில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். மேலும், மூன்று மாணவர்கள் மட்டும் லேசான காயத்துடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்!