திருவாரூர் மாவட்டத்தில் கடந்த வருடம் வீசிய கஜா புயலில் சாலையோர மரங்கள், தென்னை மரங்கள் என ஒரு கோடி மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் தன்னார்வலர்கள் சிலர் இழந்த மரங்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மன்னார்குடி அறம் நண்பர்கள் குழு, தான் தோன்றி குழுவினருடன் இணைந்து இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
கஜா புயல் தாக்கி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், இன்று மன்னார்குடியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்களை கொண்டு இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு இலட்சம் மர விதைகளை மாட்டு சானத்துடன் இணைத்து உருட்டி விதை பந்துகளை உருவாக்கினர்.