திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 101 வானகங்கள் ஆய்விற்கு வந்திருந்தன. இதனை மன்னார்குடி ஆர்டிஓ. புண்ணியக்கோட்டி, மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் , தீயணைப்புதுறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளி வாகன ஒட்டுநர்களுக்கு அவசரக் கால செயல்முறை பயிற்சி - School bus inspection
திருவாரூர்: மன்னார்குடியில் போக்குவரத்துத் துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்ளை ஆய்வுசெய்து ஓட்டுநர்களுக்கு அவசரகால செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கபட்டது .
அவசரகால செயல்முறை விளக்க பயிற்சி
இதில் ஓட்டுனர்களின் அனுபவம், வாகனத்தின் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வாகனத்தின் தற்போதைய தரம், அவசர கால வழி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன . பின்னர் அவசர காலத்தில் தீ அணைப்பு சாதனங்களை எப்படி பயன்படுத்துவது , பள்ளிக்குழந்தைகளை வாகனத்தில் கையாளுவது குறித்து ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது .