திருவாரூர் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியர் குமார் - யோகலெட்சுமி. இவர்களது மகன் விநாயக் (4) திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தார்.
இந்நிலையில் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் விநாயக் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டிலிருந்து வெளியில் ரோட்டிற்கு ஓடிவந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் மணல் ஏற்றிவந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.