திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வி.கே. சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான திவாகரன், தனது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் திவாகரன் பேசினார். அப்போது சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுக, அமமுக, அண்ணா திராவிடர் கழகம் ஆகிய மூன்று இயக்கமும் ஒன்று சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "மூன்று இயக்க தொண்டர்களின் மனநிலை அப்படிதான் உள்ளது.
ஆனால், சசிகலா ஜனவரி மாதத்தில் வெளியே வருவாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தற்போது, சசிகலாவை வெளியில் வரவிடாமல் சிறையில் வைத்துக்கொண்டே வெளியில் அரசியலை நடத்தி வருகிறார்கள். இதனை அறிந்த தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி ஆகியோர் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அரசியலில் நேர்மை இருக்க வேண்டும் " என்று பதிலளித்தார்.
'சசிகலா வெளியே வருவரா என்பது கேள்விக்குறி'- சசிகலாவின் சகோதரர் திவாகரன் மேலும் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலை ஒரு கட்டமாக நடத்தினால் தான் அது நல்ல தேர்தலாக இருக்கும். பொங்கல் தை மாதம் தான் வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு மக்களுக்கு கார்த்திகை மாதமே பொங்கல் பரிசு கொடுத்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளனர். இதை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது" என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: பொன். மாணிக்கவேலிடமிருந்து ஆவணங்கள் வரவில்லை - புதிய ஐஜி அன்பு