திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் நாளைய பாரதம் நண்பர்கள் குழுவினர் தொடர்ந்து கஜா புயல் பேரிடர் காலங்கள் , கரோனா தொற்று காலங்களில் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 லட்சம் ரூபாய் நிதியை தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்து வழங்கிய நாளைய பாரதம் குழு! - முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதி
திருவாரூர்: நன்னிலத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நாளைய பாரதம் குழுவின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினர்.
இந்நிலையில் இக்குழுவினர் தியாக உணர்வுடன், குறைந்த சம்பளத்தில், கரோனா முன் தடுப்புக் களப்பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பணியைக் கௌரவிக்க முடிவு செய்தனர்.
இதனால், நன்னிலம் அருகிலுள்ள ஆனைக்குப்பம் ஊராட்சியில் தூய்மைப் பணிகள் செய்யும் தங்கராசு, ரவிச்சந்திரன் ஆகிய இருவர் கையால், நாளைய பாரதம் குழுவால் வசூல் செய்யப்பட்டத் தொகையை, முதலமைச்சரின் கரோனோ நிவாரண நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு லட்சம் ருபாய்க்கான காசோலையாக நன்னிலம் வட்டாட்சியர் கார்த்திக்கிடம் வழங்கினர்.