திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வந்தனர். தற்போது, குறுவை சாகுபடி முடிந்ததையடுத்து சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, "பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே குறுவை சாகுபடி செய்து வந்தோம். தண்ணீர் பிரச்னை, யூரியா, பொட்டாசியம், பூச்சிக்கொல்லி, மருந்துகள் தட்டுப்பாடு மத்தியில் சாகுபடி பணிகள் முடிவடைந்தது. தற்போது, சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகிறோம்.