திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அம்மா உணவகத்திற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் வழங்கியது போல் ஜூன் மாதத்திற்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.
'ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டது சட்டபூர்வமான நடவடிக்கை' - அமைச்சர் காமராஜ் - Minister Kamaraj News
திருவாரூர்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டது சட்டபூர்வமான நடவடிக்கை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
-minister-kamaraj
அதையடுத்து அவர், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டது சட்ட ரீதியான நடவடிக்கை. அதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'இலவச மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் திருத்தச் சட்டத்தை ஏற்போம்' - அமைச்சர் தங்கமணி