தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் மூட்டைக்கு ரூ.40 வசூல்: கலக்கத்தில் தவிக்கும் விவசாயிகள் - நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ.40

திருவாரூர்: நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என அலுவலர்கள் கேட்பதாக திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன்
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன்

By

Published : Feb 26, 2020, 7:29 AM IST

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகளின் தேக்கம் குறித்து திருத்துறைப்பூண்டி திமுக எம்.எல்.ஏ. ஆடலரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திருவாரூர் மாவட்டத்தில், சுமார் மூன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. அதற்கான அறுவடை பணிகள் முடிந்து, நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்துவருகின்றனர்.

இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் தாமதமாக நடைபெறுவதால், விவசாயிகள் கொண்டு வரும் பல ஆயிரம் நெல் முட்டைகள் தேங்கியுள்ளன. அவைகள் வீணாகும் நிலையும் ஏற்படுகிறது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் பேட்டி

எனவே நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் இயந்திரங்களை இரட்டித்து, வேகமாக கொள்முதல் செய்ய அலுவலர்கள் முன்வர வேண்டும். நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் எடுக்கும் முறையை மாற்றி கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

அதிலும் குறிப்பாக, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டையை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என அலுவலர்கள் கேட்பதாக புகார் வருகிறது. அதனை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈரோட்டில் இரண்டாம் போக பாசனத்தை தொடங்கிய விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details