தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர் காப்பீடு வழங்குவதில் ரூ.40 லட்சம் முறைகேடு - திருவாரூர் விவசாயிகள் குற்றச்சாட்டு! - Agricultural Co-operative Credit Union

திருவாரூர்: மன்னார்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீடு வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Thiruvarur farmers
Thiruvarur farmers

By

Published : Dec 15, 2019, 3:13 PM IST

மன்னார்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீடு வழங்குவதில் ரூ.40 லட்சம் முறைகேடு செய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

"திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் உள்ள பயிர்க் காப்பீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்தனர். அதில் தற்போது 600 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர்கள் பயிர்களுக்கு செலுத்திய காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல், கூட்டுறவு கடன் சங்கம் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், காப்பீட்டுத் தொகை பெறாதவர்கள் கணக்கிலும் கடன் வாங்கியதாக பற்று வைக்கப்படுகிறது. தொடர்ந்து பரவாக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளோம்" என்றனர்.

திருவாரூர் விவசாயிகள்

இதையும் படிங்க:பயிர் காப்பீட்டுக்கான இணைய சேவை முடக்கம் - விவசாயிகள் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details