திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெருவைச் சேர்ந்தவர் கராத்தே மாரிமுத்து. இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட ஏராளமாக வழக்குகள் உள்ளன. சமீபத்தில் திருவாரூர் நகர் பகுதியில் ஆயுதங்களுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று (ஜூலை 8) பிணையில் வெளிவந்த நிலையில், இன்று அதிகாலை திருவாரூர் ரயில் நிலையம் அருகே ரவுடி கராத்தே மாரிமுத்து அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். வழக்கம்போல் அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொண்ட நபர்கள் சிலர் இறந்தவரின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.