திருவாரூர் மாவட்டம் அசோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அதில் ஒருவர் தான் கொள்ளயடிக்கப்போகும் வீட்டின் அருகில் இருக்கும் மற்ற வீடுகளுக்கு தாழ்பாள் போட்டுவிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அசோக் நகர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
நடிகர் வடிவேலு பட பாணியில் பக்கத்து வீடுகளை பூட்டி விட்டு திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது - Two people arrested for robbery
நடிகர் வடிவேலு பாணியில் அருகிலிருக்கும் வீடுகளை பூட்டி விட்டு ஒரே வீட்டை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28), அவரது சித்தப்பா ரவிக்குமார் (47) இருவரும் கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட விசாரணையில் இருவரும் சென்னை கோடம்பாக்கம், அசோக் நகர், தாம்பரம், சங்கர் நகர் இதே போல கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும். இவர்கள் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதோடு இவர்களிடமிருந்து 47 சவரன் நகைகள், ரூ 6.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மைலாப்பூர் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய தந்தை, மகன்