தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டி கிராம மக்கள் கோரிக்கை! - திருவாரூர் சாலை வசதி செய்திகள்

திருவாரூர்: பல ஆண்டுகளாக வயலின் வரப்புகளை சாலையாக பயன்படுத்தும் கிராம மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை இல்லாமல் மக்கள் அவதி
சாலை இல்லாமல் மக்கள் அவதி

By

Published : Jul 27, 2020, 7:12 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பண்ணைநல்லூர் வடக்கு தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதி மக்களுக்கு சாலை வசதி இல்லாததால் வயல்களின் வரப்புகளை சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வயல்களில் புகுந்து விடுவதால் சாலை எது, வழி எது என்று தெரியாத அளவிற்கு தண்ணீர் உட்புகுந்து விடுகின்றது என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

சாலை இல்லாமல் மக்கள் அவதி
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றோம். எங்கள் பகுதிக்கு சுமார் 2 கிலோமீட்டர் வரை சாலை இல்லாமல் வயலின் வரப்புகளை சாலையாக பயன்படுத்தி வருகின்றோம்.
மழைக் காலங்களில், எங்கள் பகுதி தனித் தீவு போல் காட்சியளிக்கின்றது. இரவு நேரத்தில் இந்தச் சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் நடந்து செல்வதற்கும் மிகுந்த அச்சமாக உள்ளது. பெண்கள் குழந்தைகள் வெளியில் சென்று உபாதை கழிப்பதற்கும் அவசரத்திற்கு செல்வதற்கும் கூட தயங்குகின்றனர்.
இதுகுறித்து பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அமைச்சரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி எங்கள் பகுதிக்கு தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் வேதனையுடன்..!

இதையும் படிங்க: கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details