தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் கடையடைப்புப் போராட்டம் - Petition Thiruvarur Merchants Association

திருவாரூர்: சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு போராட்டம்
கடையடைப்பு போராட்டம்

By

Published : Mar 3, 2020, 9:02 PM IST

Updated : Mar 4, 2020, 8:08 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கிராம வழியாகத் தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. வடுவூர் கிராமம் வழியாக செல்லும் தஞ்சை மன்னார்குடி நெடுஞ்சாலையின் இருபுறமும் 190 கடைகள் உள்ளன.

இந்தச் சாலை விரிவுபடுத்தப்பட்டால் 90-க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்படும் என வணிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் வடுவூர் பகுதியில் சாலை விரிவாக்க அளவை குறைத்து அளவிட வேண்டும் என வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர், கட்டட உரிமையாளர்கள் சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

மேலும் நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் கடை உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இழப்பு நேரிடும் எனவும் அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்யக்கோரியும் வணிகர் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கடையடைப்புப் போராட்டம்

இதையும் படிங்க: சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை!

Last Updated : Mar 4, 2020, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details