தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2020, 1:43 PM IST

ETV Bharat / state

விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் - முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

திருவாரூர்: குறுவை கொள்முதல் பின்னடைவால் விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது என முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பீ.ஆர் பாண்டியன்
தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பீ.ஆர் பாண்டியன்

மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்;

காவிரி டெல்டாவில் குறுவை அறுவடை தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு பருவ மழை பருவம் மாறி மழை பெய்வதால் கொள்முதலில் மிகப்பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 20-ல் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் அறுவடையும், கொள்முதலும் நிறைவுபடுத்த வேண்டும் இல்லையேல் பேரழிவு ஏற்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு 1000 சிப்பங்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் 500 முதல் 600 சிப்பங்கள் மட்டுமே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லட்சக்கணக்கில் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்காலிக கிடங்குகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளதால் மூட்டைகளை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முத்துப்பேட்டையில் 60 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான புதிய கிடங்கு உள் சாலை அமைக்காததால் பயனற்று கிடக்கும் அவலம் தொடர்கிறது.

விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் - முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

மத்திய அரசுக்கு சொந்தமான கிடங்குகள் காலியாக உள்ள நிலையில் வாடகை கட்டணம் அதிகம் என்பதால் அதனை பயன்படுத்த நுகர்பொருள் வாணிபக் கழகம் மறுத்து வருகிறது. தற்போதைய நிலையில் தொடர்ந்து சுமார் 3 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால் கிராமங்களில நெல் குவியல்களாக கொட்டி வைத்து விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் நெல் குவியல்கள் நனைந்து வீதிகளில் அடித்து செல்லப்படுவதால். விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

பாதிப்பை கருத்தில் கொண்டு தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் உணவு தானிய கிடங்குகளை வாடகையின்றி பெற வேண்டும். அன்றாடம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். தேவையான சுமை தூக்கும் பணியாளர்களை அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பணியமர்த்த வேண்டும். மழையில் நனைவதிலிருந்து பாதுகாக்க தேவைக்கேற்ப தார்பாய்கள் மற்றும் சாக்கு பைகள் விவசாயிகளுக்கு முன் கூட்டி வழங்க வேண்டும்.

கொள்முதல் பணிகளை விரைவுப்படுத்த மாநில உயர் அலுவலர்கள் குழுவை அனுப்பி வைத்திட முதலமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சரும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையேல் காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details