தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்திய பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளின் விருப்பம்

திருவாரூர்: திருத்திய பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆனந்த்
மாவட்ட ஆட்சியர் ஆனந்த்

By

Published : Jun 26, 2020, 10:42 PM IST

விவசாயிகள் பயிர் செய்த சாகுபடிகள் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பாதுகாக்க பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம், 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்தது.

இதில் மத்திய அரசு தற்போது பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதற்காக இந்திய பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகப் பதிவு செய்து, வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பெயரில் மட்டுமே பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட வாரியாக, பயிர் வாரியாக சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நெல் மணிகளை பயிர் காப்பீடு செய்ய ஜூலை மாதம் 31ஆம் தேதியை இறுதியாக அறிவித்துள்ளது.

'விவசாயிகள் ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 651 ரூபாய் பிரீமியம் செலுத்தவேண்டும். இதனை அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் பிரீமியத் தொகையை செலுத்தலாம்' என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

மேலும் கடன் பெறாத விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான சிட்டா அடங்கலை, கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அல்லது இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரைத் தொடர்புகொண்டு, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details