ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் - Retired village assistants

நிதி ஓய்வு ஊதிய அரசாணையை நிறைவேற்றக்கோரி ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சங்கத்தினர் திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Retired village assistants involved in the attention-grabbing demonstration at thiruvaru
Retired village assistants involved in the attention-grabbing demonstration at thiruvaru
author img

By

Published : Nov 10, 2020, 2:23 PM IST

திருவாரூர்:மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நிதி ஓய்வு ஊதியம் அரசாணை எண் 408 அரசாணைகளை உடனடியாக அமல்படுத்தி 1995ஆம் ஆண்டிற்கு முன் உள்ள பணிக்காலத்தை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும்.

ஏனைய ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு குடும்ப நல நிதியாக ரூபாய் 50,000 வழங்கிட வேண்டும். பண்டிகை காலங்களில் முன்பணம் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கிட வேண்டும்.

in article image
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள்

மேலும், கிராம உதவியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி, அடிப்படை ஊதியமாக ரூபாய் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: 10%ஆக போனஸ் குறைப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details