திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அமைந்துள்ள உப்புக்காரத் தெருவில், சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளுக்கு இடையில் செல்ஃபோன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் பணியை தொடங்கியது.
கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் இந்நிலையில், செல்ஃபோன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் பணியைத் தொடங்கியது. அந்த இடத்திற்குச் சென்ற பொதுமக்கள் உடனடியாக பணியை நிறுத்தி பணியாளர்களை வெளியேற்றினார்கள். அப்பகுதிக்கு வந்த பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: புனரமைக்கப்படும் அண்ணா பூங்கா -விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை