திருவாரூர்மாவட்டம், வலங்கைமான் அருகே பாடகச்சேரி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் கடந்த 3 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சரும் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான காமராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களிடம் இங்குள்ள தங்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கவேண்டும் என்று கோரி மனுக்கள் அளித்தும், அதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாகத் தெரிய வருகிறது.
ஆதிதிராவிடர் வீடுகளை அப்புறப்படுத்த முயற்சி; மக்கள் வேதனை: இதுகுறித்து கடந்த ஆட்சியில் தங்களுக்கு எந்தவொரு அடிப்படை தேவைகளையும் அரசு செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டையும் அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.
இத்தகையச்சூழலில் தற்போது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை நிர்வாகம் மேல ஆதிதிராவிடர் தெருவில் உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையினை எடுத்துவருவதால், அங்குள்ள ஏழை மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்:பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையால் அங்குள்ள குழந்தைகளின் கல்விக்கேள்விக்குறியாகியுள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், ஏழை எளிய மக்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு 3 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்துவரும் எங்களுக்கு பட்டா வழங்கி எங்களது தலைமுறையினை பாதுகாக்க வேண்டும் எனவும்; மாறாக தமிழ்நாடு அரசு அப்பகுதி மக்களுக்கு மாற்று இடங்களில் குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக ஏற்கெனவே, அம்மக்கள் வாழும் இந்தப் பகுதி அரசின் ஆவணங்களில் மேல் ஆதிதிராவிடர் தெரு என வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை இதையும் படிங்க:Vignesh Lockup death : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை!