திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட நாடோடி சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரிய தொழிலான நரி, காக்கா, குருவி, கீரி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடியும், ஊர் ஊராக சென்று ஊசிமணி,பாசிமணி, பொம்மைகள் விற்றும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
கரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், இதுவரை தமிழ்நாடு அரசின் எந்த உதவியும் இச்சமூக மக்களுக்கு கிடைக்கவில்லை. நாடோடியாக வாழ்ந்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பிள்ளைகளை கல்லூரி வரை படிக்க வைத்தாலும், அரசு வேலை கிடைப்பதில், தங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களும் வேலை கிடைக்காத ஏமாற்றத்தில் பாரம்பரிய தொழிலுக்கே திரும்பும் நிலை ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எங்களைக் காக்க யாருமில்லை இதுகுறித்து நாடடோடி சமுதாய மக்கள் கூறுகையில், நாடோடி சமூகமான எங்களுக்கு வீடு வாசல் என்பது கிடையாது. பிரதான தொழிலான, நரி, கீரி ஆகிய விலங்குகளை வேட்டையாடி அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். விலங்குகளை வேட்டையாடினால் வனத்துறை அலுவலர்கள் எங்களை பிடித்து சிறையில் அடைத்து விடுவதால் வேட்டை தொழிலையும் மறந்துவிட்டோம்.
வேறு தொழிலும் தெரியாது. அரசு எங்களுக்குஎன்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. எம்பிசி பட்டியலிலிருந்து விலக்கி எஸ்டி பிரிவுக்கு எங்களை மாற்ற வேண்டுமென 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
குழந்தைங்க தான் எங்க எதிர்காலம் எங்களது வாழ்க்கை தான் நாடோடிகளாக போய்விட்டது, எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையாவது முன்னேற்றமடைய வேண்டும். தமிழ்நாடு அரசு எங்கள் சமுதாய மக்களை எம்பிசி பட்டியலில் இருந்து அகற்றி எஸ்டி பட்டியலுக்கு மாற்றித் தந்தால், எங்கள் குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல் படித்து அரசு பதவிகளுக்கு வர முடியும்" என்றனர்.
"நாங்கதான் நாடோடிகளா வாழ்ந்துவிட்டோம் இதையும் படிங்க:மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு