திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்புவானோடையை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய தோட்டத்தில் தென்னங்கன்றுகள் நடும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அதில் பழங்கால சிலைகள் இருந்ததை கண்டு வியப்படைந்த பணியில் இருந்தோர், அதிலிருந்து அச்சிலைகளை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அதில் சோமாஸ் கந்தர், அம்பிகை, நடராஜர், விநாயகர், சுந்தரர் உள்ளிட்ட 7 பழங்கால சிலைகள் இருந்தன.
தென்னங்கன்று நட குழி தோண்டியபோது பழங்கால சிலைகள் கண்டெடுப்பு! - பழங்கால சிலைகள்
திருவாரூர்: தென்னங்கன்றுகள் நட குழி தோண்டியபோது ஏழு பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
rescued
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் ஜெகதீசன், ஏழு பழங்கால சிலைகளையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். அச்சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பானவை என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது எப்படி? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Last Updated : Jan 6, 2021, 9:27 PM IST