மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டத்தில் 24 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அனுமதிக்கப்படுகிறது.
திருவாரூரில் 56 லட்சம் பறிமுதல்: காவல்துறை நடவடிக்கை - பறிமுதல்
திருவாரூர்: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று அதிகாலை கொரடாச்சேரி அருகே உள்ள முகுந்தனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சொகுசு காரில் பென்னிரபேல் என்பவரிடமிருந்து உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை வருவாய் கோட்டாட்சியர் முருகதாசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று இன்று காலை மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை பகுதியில் 3 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.