தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் சாலை மறியல் - நியாய விலைக்கடை ஊழியர்கள் சாலை மறியல்

திருவாரூர் : ரேஷன் கடைகளில் 100 விழுக்காடு பொருள்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாய விலைக்கடை ஊழியர்கள் சாலை மறியல்
நியாய விலைக்கடை ஊழியர்கள் சாலை மறியல்

By

Published : Feb 12, 2021, 9:11 PM IST

தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா. குணசீலன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நியாய விலைக்கடை ஊழியர்கள் சாலை மறியல்
போராட்டத்தின்போது டி.என்.சி.எஸ்.சிக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், பணி நேரத்தை வரைமுறைப்படுத்தி ரேஷன் கடைகளில் 100 விழுக்காடு ரேஷன் பொருள்கள் வழங்கிட வேண்டும், கரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் நாகை-திருவாரூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details