திருவாரூர் அருகே உள்ள வடக்குவெளி கிராமத்தின் வழியாகச் செல்லக்கூடிய ஓடம்போக்கியாற்றில் புரெவி புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள மணல்மேடு கிராமத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மணல்மேடு கிராமம் முழுவதும் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் ஆடு, மாடுகள் முதல் வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
மணல்மேடு கிராமத்திற்குள் புகுந்த ஆற்றுநீர்: பொதுமக்கள் அவதி - Rain floods in Manalmedu village near Thiruvarur
திருவாரூர்: ஓடம்போக்கியாற்றில் உடைப்பு ஏற்பட்டு மணல்மேடு கிராமத்திற்குள் புகுந்த ஆற்றுநீரால் மக்கள் தவித்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

rain
மணல்மேடு கிராமத்திற்குள் புகுந்த ஆற்றுநீர்: பொதுமக்கள் அவதி
Last Updated : Dec 6, 2020, 1:58 PM IST