தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் கனமழையால் சேதமடைந்த குறுவை பயிர்கள்: வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு - Thiruvarur district news

திருவாரூர்: மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த குறுவை பயிர்களை வேளாண் துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கனமழையால் சேதமடைந்த குறுவை பயிர்கள்
கனமழையால் சேதமடைந்த குறுவை பயிர்கள்

By

Published : Oct 1, 2020, 7:26 PM IST

திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள இளவங்கார்குடி, பெரும்புகலூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் குறுவை பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வடிகால் வசதி இல்லாததே இந்த பாதிப்புக்கு காரணம் எனவும் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து தரவேண்டும் என்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் விவசாயிகளிடம் தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர் காப்பீட்டுத் தொகை: வேதனையில் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details